கேடயம்
கண்ணியமான நோன்பால்
கயமையும் காணாமல் போயிற்றே..!!
இறையச்சம் இதயத்தில் இணைந்ததால்
இச்சையும் இல்லாமல் ஆயிற்றே ...!!
தீமையின் திசையை நினைத்தாலே
தீக்குழம்பிடும் நரகமும் தெரிந்திற்றே..!!
அன்பால் மொழியும் அரைசொல்லுக்கும்
ஆயிரம் நன்மைகள் கிடைத்திற்றே ..!!
அறநெறியில் வைத்த ஒரு அடிக்கும்
கோடியாய் அருள்மழை பொழிந்திற்றே..!!
ஈகையாய்த் தந்த இரும்பும்
ஈடில்லா பொன்னாய்ப் பெருகிற்றே..!!
மகத்தான ரமலான் மாதமும்
மனதிற்குக் கேடயமாய் அமைந்திற்றே..!!
~~~~என்றும் அன்புடன் பாத்திமா..