சிறு குறிப்பு...!

"காதலிக்க அவளுக்குப்
பிடிக்கவில்லை...
காதலுக்கு என்னைப்
பிடிக்கவில்லை..."

"இப்படி இந்தக் கவிதையைத்
தொடங்க
உனக்கு யார் சொன்னது..."

"சுயம்"

"மயிறு"

"காதலிகளின் நினைவுகள்
மட்டுமே
அழகானது.....
அது நிதர்சனத்தை அழித்துவிட்டு
வேறொரு உணர்வுக்குமிழாய்
மனதில்
மீளெழுச்சி கொள்கிறது..."

"உண்ண உணவில்லை.....
நம்மை ஆளும் வர்க்கம்
அயல்நாட்டிற்கு விற்றுவிட்டது....
ஏகாதிபத்தியம்
எக்களித்து சிரிக்கிறது.....
விவசாயத் தற்கொலைகளைப்
பதிவு செய்ய காகிதங்கள்
போதவில்லையாம்.....
நீ காதல் கவிதை
எழுதி கொண்டிரு......
சாத்தான்கள் சுபிட்சம் கொள்ளட்டும்"

"நான் கவிஞன்"

"மயிறு"

"காதலின் நீட்சியாய்
தற்கொலைகள்
இருப்பதில் இக்கணம்
முதல் உடன்படுகிறேன்...."

"செருப்பால அடிப்பேன் நாயே....!
ஊரெரிந்துக் கொண்டிருக்கிறது...!
நீ தமிழ் எழுத்தாளர்களைப் போல்
பூவுக்கும் புள்ளிற்கும் பின்
போய் சுயஇன்பம்
செய்து கொண்டிரு....!"

"எனக்குக் காதல் மட்டும்
தான் வரும்.."

"நீ என்னைக்
காதலித்திருக்க கூடாது.."

"நீ "சிகப்பாய்ப்" பேசுகிறாய்..."

"நீங்கள் கருப்பாய் நெளிகிறீர்கள்..!
அணுவுலை வைத்து லட்சமாய்
உயிர்குடிக்கத் துடிக்குது
அரசு...
நீங்கள் காந்திக் குரங்காய்
எல்லவற்றையு இறுகப்
பொத்திக்கொண்டு
வாசகனைப் புணர்ந்துக்
கொண்டிருங்கள்...!"

"என்ன தான்
செய்ய சொல்கிறாய்
என் முரட்டுக் காதலியே...?"

"நிதர்சனம் எழுது...!
கண் வலிக்க
சுற்றி சுற்றிப் பார்...!
அவலங்கள் மலிந்த
பூமி இது....!
நீ எழுத வந்தாய் எனில்
இயல்பை நவில்...
பெண்களின் இடைக்கும் கொங்கைக்கும்
உவமை தேடி அலையாதே....
இன்றைய எழுத்துகள்
நாளையின் நேற்றைப்
பற்றிய பதிவு...!
என் குழந்தைகள்
உங்களை எல்லாம்
படித்தால் என்ன நினைப்பார்கள்?"

"ம்ம்ம்ம்..."

"நம் காலத்தில்
பாலும் தேனும் ஓடிற்று...!
அதனால் தான்
பேனா பிடித்தவன் எல்லாம்
பெண்களைப் பிடித்திருக்கிறான்..
என்றல்லவா...?"

"அட...! ஆமாம்...!"

"இப்ப என்ன சொல்ற...?"

"இந்தக் கவிதைய
இப்புடி முடிக்கவா?
"வரலாற்றையும் காலத்தையும்
கொடுமையான நிதர்சனத்தையும்
இருட்டடிப்புச் செய்யும்
போலி எழுத்தாளர்களே....!
காதோரம் இச்சிறுகுறிப்பு"...?"

"ம்ம்ம்"

எழுதியவர் : நெ.ஹரீஷ். (25-Jul-12, 12:23 pm)
பார்வை : 271

மேலே