உன் வானின் வெண்ணிலா
எந்தன் வானமாக
நீ இருக்க ஆசை.
வானில் நிலவாக ,
நான் மட்டுமே உலா வரவேண்டும்.
நட்சத்திரங்களுக்கு இடமிருப்பதில்
எனக்கு இசைவில்லை .
வானில், நிலவிற்கே முதலிடம்.
என்றாலும் ,
நானில்லாத பொழுதுகளில்
நட்சத்திரங்களின் நர்த்தனம்தானே .