என்னை எண்ண வைத்தான்.....(பகுதி - 1)

என்னுள் என்ன வைத்தானென
என்னை எண்ண வைத்தான்....

முள்ளில் மலரை வைத்தானோ
முழுமலரில் முள்ளை தைப்பானோ
எதையெண்ணி என்னை நினைத்தானோ; மாதர்த்
தோல்மறைவில் என்னை வைத்தானோ

நினைத்தது தவறென நின்றுவிட்டானோ
கருவறையில் காலனோடு வந்துவிட்டானோ; பின்
கழியட்டும் கணக்கென விட்டுவிட்டானோ

வாய்ப்பு கிடைத்ததென வளர்ந்துவிட்டானோ
வாழ்வில்போராட துணிந்துவிட்டானோ
மாதம் பத்தில்,
மாதாவிடமே மரணப்போரிட்டு மீண்டுவந்தானோ

தேடல், தொடரும்.....(சற்றுமுன் தானே, பிறந்துள்ளான்)

என்னுள் என்ன வைத்தானென
என்னை எண்ண வைத்தான்.....



குறிப்பு:
1. இரண்டாம் பத்தியின், முதல் வரியில், ''முள்'' என்பதற்கு பொருள் ''உலகம்''
2. இரண்டாம் பத்தியின், இரண்டாம் வரியில், ''முழுமலர்'' என்பதற்குப் பொருள் ''உலகம்''

எழுதியவர் : A. பிரேம் குமார் (1-Aug-12, 2:03 am)
பார்வை : 192

மேலே