அ முதல் ஃ வரை ..ஒரு வாழ்த்து..

அன்பெனும் வாழ்க்கை சோலையிலே ..
ஆசையெனும் ஊற்றெடுத்து ..
இல்லறத்தில் அடி எடுத்து வைக்க போகும் நீ..
ஈகை பல புரிந்து ..
உற்றார் உறவினர் போற்ற..
ஊருக்கு எடுத்து காட்டாய் வாழ்ந்து ...
எல்லா வளமும் நலமும் பெற்று...
ஏற்றமிகு வாழ்வுதனை தந்து ...
ஐம்புலன்களையும் ..ஆளுமை செய்து..
ஒற்றுமையாய் வாழ்ந்து ..உன் அன்பு நெறி ..
ஓங்க ..பண்பு நெறி ..பிறழாமல்
ஒளவையின்..அமுத மொழிகளை பின்பற்றி..
(அ)ஃதறிந்த..இனிய வாழ்வுதனை ...
வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்..........

எழுதியவர் : அனாமிகா (1-Aug-12, 8:49 am)
பார்வை : 285

மேலே