மனமே கேள் !

மனமே மனமே கலங்காதே
தோல்வியை நினைத்து துவளாதே !
விடா முயற்சியை படையாக்கு
எதிர்வரும் துன்பத்தை தவிடுபொடியாக்கு !
தோல்வியினையே விதையாக்கு
வெற்றியே விருட்சமாகும் !
நம்பிக்கை கொள் !
நிச்சயமாக நீ வெல்வாய் !
துன்பமில்லா வாழ்க்கையில்லை
சோதனையில்லா சாதனையில்லை !
வெற்றிக்குப் படிக்கட்டு
தன்னம்பிக்கையால் நீ கட்டு !
சுவாமி விவேகானந்தர் சொன்ன யுக்தி
மனித மனம் கொண்ட சக்தி !
ஓ மனமே .... மனித மனமே !
நம்பிக்கையால் வாழ்வை வெல்வாயாக !
நண்பர்களே இது நான் எழுதிய முதல் கவிதை ...!
தினத்தந்தி மாணவர் இதழில் அச்சிடப்பட்டது !
தேதி:21 -03 -2011