ஒரு பொம்மை பேசுகிறது
ஒரு பொம்மை பேசுகிறது…
பொம்மை..
வாய்மை நீ..
புறம்பேச தெரியாது..
பொறாமை இல்லை..
எதிரிப்பார்ப்பு இல்லை..
அன்பு கொண்டவனிடமும்
ஆசை கொண்டவனிடமும்
ஆனந்தத்தை
அள்ளி அள்ளி
கொடுக்கும் கொடை வள்ளல்.. நீ
வேலைக்காரன் மகனா..
தோட்டக்காரனா…
உன்னை பிஞ்சு கால்களால்
தட்டி தட்டி
பார்க்கும்..
என் வீட்டு பூனைக்குட்டியா
அறியாமல்
உன்னை குரைத்து முறைக்கும்
பார்க்கும்..
என் வீட்டு நாய்குட்டிகளா..
யார் கொழுத்தினாலும்..
உனக்குள்
ஒரு ஜோதி தான்…
உனக்கு ஜாதி மத இன..
பேதமும்மில்லை
அசைவுகள் ஏதுமின்றி.
அளவிளா ஆனந்தம்
அனைவருக்கும்
காட்டுவாய்
பொம்மை..
என் மெய் நீ..
என் கனவுகளை
என் ஆசைகளை
என் உணர்வுகளை
உனக்குள் என்னை
புகுத்து கொண்டு
வாடகை ஏதுமின்றி
ரசித்த
நாட்கள் எத்தனை…??
பொம்மை..
உண்மை நீ..
பொய் பேச தெரியாது..
காந்தியின்
அந்த குரங்கு தத்துவமே..
உருப்பேற்றது…
உன்னால் தானே..
என் ரசனையின் பிரபஞ்சமே..
சிறை கைதியாய்
உன்
கண்ணாடி கதவுகளில்
சாய்ந்து நான் சிலையாய்
நிற்கும் போது…
ஆயிரம் அன்பு செய்வாய்
ஆயிரம் ஆறுதல் தருவாய்..
சிலையாய் நீ
நின்றாலும்…
என் உணர்வுகளுக்கு
சிலிர்ப்புட்டூவாய்..
சிந்தனைக்கு வழி
காட்டுவாய்..
ரசனை தான்..
உலகத்தில் அளவிட
முடியாது..
அது
முதலில் நிரூபணம் ஆனது
உங்களால் தானே...
நான் எட்டி நிற்க்கும் போது
காதோரம் வந்து
ஓசையின்றி
கை தட்டி
நிற்கும் உங்கள்
ஒவ்வோரு இதயத்திற்க்கும்
எப்போதும்
எனக்குள்
இடம் உண்டு…
நாளை..
என்
கல்லறையிலும்
அது போல்..
ஓர் இடம் நிச்சயம்…
என்
செல்வங்களே…
மஹாதேவன்..