எனக்காக சில நிமிடங்கள் செலவிடுங்கள் ...

ஒரு கணம் அவசரத்தில் உங்களையெல்லாம் இழந்துவிட்டேன். அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என் சமூகம் அனைத்தையும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டேனே!

இவ்வளவு உறவுகள் எனக்காக நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறீர்கள் என்பதை எனக்கு மறந்து போனது என் அறியாமையே!

என் பிரச்சனைகளை மறைக்க மரணத்தை துணைக்கு அழைத்து விட்டேன். மரணம் என்னை கைது செய்து விட்டது.

என் சொந்தங்களே! பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்த எத்தனையோ உறவுகள் இருக்க தற்கொலையோடு பேச்சுவார்த்தை நடத்தி தோற்றுப்போனேன்.

எல்லோரும் என் உடலைக் காண வரும் போது ஒவ்வொரு பிரச்சனையோடு தான் வந்திருக்கிறார்கள் என்பதை அவர் மனதில் உள்ளதை என் மனக் கண்ணால் தெரிந்து கொண்டேன்.

மூட நம்பிக்கையும், அறியாமையும் தான் என்னையும் உங்களையும் பிரித்துவிட்டது.

உறவுகளே!நண்பர்களே!பிரச்சனைகள் வாழ்க்கையில் ஒரு பகுதி தான் இதற்கு நம் வாழ்க்கை முழுவதையும் கொடுத்துவிட முடியாது. கூடாது.

உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மனம் விட்டு பேசுங்கள். வெற்றி பெற வாய்ப்புகள் பல இருந்தும் பயன்படுத்தாத மனிதர்கள் தான் வாழ்க்கையில் தோற்று போகிறார்கள். எனக்கு அஞ்சலி செலுத்தும் நல் உள்ளங்களே கண்ணீர் சிந்தாதீர்கள்.

ஒரு கணம் சிந்தியுங்கள். தற்கொலையை இல்லாமல் செய்யுங்கள். துன்பத்திற்கு மரணம் தீர்வல்ல என்று மாத்தி யோசியுங்கள்.

இப்படிக்கு
மரணத்தின் கைதி
ஜி. விமல்ராஜ்.

எழுதியவர் : சிவகுமார் ஏ (1-Aug-12, 9:29 am)
பார்வை : 543

மேலே