பட்டுப்போன பட்டாம் பூச்சி
அது ஒரு அழகிய மாலைப்பொழுது என் கல்லூரியில் விடுமுறை எல்லோரும் அவரவர் வீட்டுக்குச்சென்று கொண்டிருந்தார்கள்.
ஆனால் எனக்கு மட்டும் வீட்டுக்குச்செல்ல முடையவில்லை இது எனக்கு வழமையான ஒன்றுதான் இருந்தாலும் இந்த விடுமுறைக்கு என்னவோ எனக்கு என் குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் போல் உள்ளது. .....
என்னைப்பற்றி கொஞ்சம் சொல்றேன் கேட்டுப்போட்டு என் ஆசை நியாயமானதா என்று நீங்களே சொல்லுங்கள்.
என் பிறந்த இடம் அழகிய ஒரு குக்கிராமம் .அவ்வளவு போக்குவரத்து வசதிகள் கிடையாது.
அங்கே எனக்கு நிறைய அன்பு கிடைக்கும. அன்பே உருவமாய் அதிந்து கூட பேசத்தெரியாத எங்க வீட்டு'' மகாலட்சுமி அம்மா'' இந்த வார்த்தை சொல்லும்போதே என் கண்ணீர் முட்டுகின்றது.அழகின் பிறப்பிடம் என் தாய் அப்பாவிர்க்கு பிடித்த அன்பு மனைவி அப்பாவின் முதல் குழந்தை ,..ம்..ம்..இப்படித்தான் அப்பா அடிக்கடி எங்களிடம் சொல்வார். நானும் அவரின் செல்லப்பொண்ணுதான் . அடுத்து எங்க வீட்டு அம்மாச்செல்லம் அண்ணா.இவனைப்பற்றி சொன்னால் இன்று பூராவும் சொல்லின்டே போகலாம்........அப்பப்பா அவ்வளவு இருக்கு ஆனால் என்னால் இப்போ கொஞ்சமாதான் சொல்லலாம்..
என் நண்பன் என்றும் சொல்லலாம் என்னிடம் தான் எல்லாம் சொல்வான் நானும் அவனிடம் தான் எல்லாம் சொல்வேன் .ஆனால் இருவரும் சரியான சண்டைக்கோழிங்க ..........எண்டு அம்மா சொல்வா.........அடிக்கடி சண்டை போட்டுப்போம் ...........
நானும் அண்ணாவும் தான் ....எங்க அப்பா ,அம்மாவின் சொத்துக்கள்.......
அண்ணா ஒரு கறுப்புப்பிரியன் அவனுக்கு ரொம்ப பிடிச்ச கலர் கறுப்புதான் .எப்ப பார்த்தாலும் கறுப்பு பேண்டும் கறுப்பு சேர்ட்டும் போட்டுண்டு பைகல (கறுப்பு கண்ணாடியும் )சுத்துறதுதான் அவனுக்கு பிடிச்சது........
இவர்களுடன் என் அம்மாவளி பாட்டி, தாத்தா.......இவ்வளவுதான் என் குடும்பத்தவர்கள்
இப்போ சொல்லுங்க இந்த ப்ருந்தாவனத்த விட்டு இருக்க முடியுமா?............ஆனால் எங்க ஊர் சூழ்னிலையால் நான் அங்கு போக முடியாது அவர்கள் எலோரும் இங்கும் வர முடியாது யாராவது ஒருத்தர்தான் வரலாம் ...என்ன கொடுமை இது ஒரு மாதம் ஒருத்தரத்தான் பார்க்க முடியும் ஏண்டா காலேஜ் படிக்க வந்தன் எண்டு இருக்கும் சில நேரங்களில் ...........
இப்படியே மூன்று வருடம் போய் விட்டது..
இன்றுடன் என் காலேஜ் வாழ்க்கை முடிகின்றது ..............இனி யாரையும் பிரிய வேண்டியதில்லை என்ற சந்தோசத்தில் இருந்தேன் ...........
எங்க வீட்டில் இருந்து யாராவது வருவார்கள் என்ற எதிர் பார்ப்பில் .............யாரும் வர வில்லை சிறிது நேரம் கழித்து என் சித்தப்பா மட்டும் ஆட்டோவில் வந்தார் .வாம்மா போகலாம் என்றார் . நானும் அம்மா ,அப்பா யாரும் வரலையா சித்தப்பான்னு கேட்டேன் . அவரும் இல்லம்மா என்ன கூட்டி வரச்சொன்னாங்கன்னார் ,.
நானும் கோபம் வந்தாலும் வீட்டுக்கு தானே போகின்றோம் அங்க போய் வச்சுக்குவோம் கச்சேரியன்னு நினைச்சுட்டு............சித்தப்பாவுடன் வீட்டுக்கு பு|றப்பட்டேன் .........என் எதிர் காலமே இருண்டு விட்டது தெரியாமல்........?????????????
தொடரும்.............