எங்கே இவை எல்லாம்?

நாம் அன்று செய்த
குரும்பட்டி தேர்
கடதாசி பந்து
பூவரசம்இலை பீபீ
நொங்கு வண்டில்
பப்பா காம்பு புல்லாங்குழல்
பனங்கொட்டை பொம்மை
ஊமல்கொட்டை கிலுக்கிட்டி
ஒல்லி தேங்காய் உண்டியல்
சைக்கிள் றிம் தள்ளுவண்டி
தென்னோலை பாம்பு
கடதாசி தோணி
குட்டி போடும் மயிலிறகு
பல வர்ண போளை விளையாட்டு
சிரட்டையில் செய்த சட்டி பனை சமையல்
மண் ஊதி தேடும் இலங்கைபூச்சி
சீமெந்து பையில் செய்த மேளம்
தீப்பெட்டி புகைவண்டி
பேனாவில் செய்த கவண்
ஈக்கிளில் கட்டிய பட்டம்
மழை நாளில் பிடித்த தம்பளம்பூச்சி
எல்லாம்
இன்று எங்கே போயிற்று?

எழுதியவர் : எஸ்.வை.சசீ (2-Aug-12, 6:43 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 180

மேலே