காத்திருக்கிறேன் அவளின் வரவுக்காக ....................

எனது வாயிற்படி காத்திருகிறது
உன் வலது காலுக்காக.............

எனது பெற்றோர் பாதங்கள் காத்திருகிறது...
உன் ஆசிர்வாதாதிற்காக...............

எனது முன்வாசல் காத்திருகிறது............
உன் கோலதிற்காக...............

எனது சமையலறை காத்திருகிறது............
உன் அறுசுவைக்காக............

எனது பள்ளியறை காத்திருகிறது.......
உன் ஊடலுக்காக...............

எனது குடும்ப அட்டை காத்திருகிறது......
உன் பெயருக்காக........

எனது கோபங்கள் காத்திருகிறது ..................
உன் தவறுகளுக்காக..............

எனது கண்ணீர் காத்திருகிறது...........
உன் கவலைகளுக்காக...............

எனது வாழ்கைபாதை காத்திருகிறது............
வழி துணையாக நீயும் வருவதற்காக........

என்றும் அன்புடன் சத்யா...........

எழுதியவர் : என்றும் அன்புடன் சத்யா........ (4-Aug-12, 6:54 pm)
சேர்த்தது : sathiyan
பார்வை : 176

மேலே