அழியா காதல்

என் இதயக்கதவுகள்
என்றும் திறந்தே இருக்கும் !
அவள்
வரவுதனை எதிர்நோக்கி!
நினைவுகள் முள்ளாய் மலரும்,
அவள்
மிதித்து நடந்த சுவடுகளால் !
ஏங்கி நிற்கும் ,
என்னவளின் தரிசனம் ஒருநாள் கிடைக்குமென்று!
நிலை மாறுமோ?
நிஜம் ஆகுமோ?
நின் வரம் கிட்டுமோ?
என் மனம் ஆறுமோ?
காலமே பதில் கூறும் ,
காதலோ என்றும் அழியாதே?

எழுதியவர் : அபி. (4-Aug-12, 6:05 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 140

மேலே