ஒரு தாயின் அழுகுரல் ....!

உறவின்பெரும் தகிப்பில் களிப்பூட்டி நீ சிரித்தாய்
உயிர் பூவாய் என்வாசலில் .............,
முற்றத்து பூஞ்செடிகளை கவனிப்பதில்லை நீ ..,வந்தபின் .
மடிகிடத்தி நான் மகிழ, மடி கிடந்தது நீ உழல -என்
துயில் துரத்தி விசிறினேன்
கொசு ,நுளம்பு உன்னை குத்தாதிருக்க
தந்தையின் அகாலப்பிரிவு
அவலத்தின் பின் -தனிமையில் உயிர் தடவி
பருகி நெகிழ்ந்தேன் உன்னை
என் அந்திமத்தை தான்கிப்பிடிப்பாய் என்றெண்ணி...,
என் கனவுகள் ,ஆசைகள் சிதைந்தது ....,
நீ பிடித்தாய் உனக்கானதுணையை
என்னை நழுவ விட்டு ,விட்டு
உன்னை ஒரு அதிதியாய் வழர்த்து
அகதியாய் போயின்று தனித்துக்கிடக்கின்றேன்
தாவரிப்பின்றி..................................
உயிரில் பாதி நீ என்று ஊர் மெச்ச வழர்த்தேன்
பெயர் வைத்த எனக்கு பிடரியில் அடித்துவிட்டாய்
கருப்பை தொடங்கி நேற்றைய நிமிஷம் வரைக்கும்
இரு சகாப்தங்களில் ஒரு சராசரி மனிதனாய் நீ ..
தாய்மையின் விலையறியா
மனித பதராய் போன மகனே உன் பின்புலம் பற்றி
முன்னமே தெரிந்திருப்பின் .....,
தரித்த கணமே கிள்ளி எறிந்திருப்பேன்
ஒரு உண்ணிபோல் உன்னை !
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.