தங்கை

தனிமை தவம்
செய்த எனக்கு,
கடவுள் அளித்த
வரம் நீ!

ஆகாயத்தில் கண்ட
வெண்ணிலவை,
அருகில் காணும்
அதிர்ஷ்டம் எனக்கு...

அன்பு போர்
செய்த போதும்,
எனக்கு வலித்தால்
அழுகை உனக்கு...

எனது விழிகளாய்
இருக்கும் உனக்கு,
இமைகளாய் தாங்கும்
பாக்கியம் எனக்கு...

தங்கையின் பாசத்திற்கு,
பரிசாய் கொடுக்கலாம்
பிரபஞ்சத்தையே!!!

எழுதியவர் : (5-Aug-12, 8:30 pm)
Tanglish : thangai
பார்வை : 287

மேலே