வேரோடழிக்க
பலாத் காரம் செய்ய முன்ற தந்தையை குத்தி கொன்ற மகளின் மீது போடப்பட்ட வழக்கு ரத்து..
சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு ..
நீதிபதி திரு/திருமதி நாகமுத்து அவர்களுக்கு சல்யூட்
நியாமான் விசாரணையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரி திரு அழகு அவர்களுக்கும் சல்யூட் .....
மெல்லிய கைவளை பிடித்து ..
மெதுவாய் முகம் நோக்கி
நெற்றிதனை முகர்ந்து
நெடிய அழுத்தமாய் ஒரு
முத்தம் கொடுத்து ..
என் இல்லத்து மகா லட்சுமி நீ
என கூறிய வார்த்தைகளில்
நான் உணர நானே கடவுளான
அந்த தருணம் ..
மல்லிகை நான் சூட -உன்
உயிர் நான் என்று
நீ உணர்ச்சி பொங்க சொல்லும்போது
நீயே என் கடவுள்
என இறுமாந்திருந்த காலம்
முதல் குழந்தை
உன் மகள் ...சிரிக்கும்
அந்த பட்டு பூவை -
நீ வெறுத்த
அந்த தருணம் -அழுத்தி பிடிக்கும்
என் கவலைகள் .....
கவலைகளை வென்ற என் மரணம் ..
மல்லி சூடிய மான் விழியாள்
மாதாவை போல் நின்ற உன்
மகளை ...உன் கனவில் நீ சூடி
குடிஎன்னும் மாய வலையினால்
நீ சிதறடிக்க முற்பட்ட தருணம்
சிலுசிலுத்த இருட்டினிலே
வைரமாய் கத்தியாய் அவள்
கைகளில் நான் -உன்னை
வேரோடழிக்க ......