போர்க் களம் - ஒரு வீரனின் கதை

லாடங்கள் தாளமிட, புழுதி விண்ணை மரைத்திட‌
ஈட்டியின் கூர்மையால் ததகத்திற்க்கு* நோக‌
புரவியின் வேகம் கண்டு புயலும் நாணியது
புரமுதுகிட்டு மறுபக்கம் ஓடியது,

மரத்தில் கட்டிய கயிரை ஆட்டினாலும்,
முடியின் நிலை மாறாததுபோல்,
குதிரையின் மேல் உடல் ஆடினாலும்,
கண் குறியின் நிலை மாறாதன்றோ,

புயல் எழுப்பும் அலைபோல்,
காட்டுக் காரா** மந்தை போல்
மிரட்டி வரும் எதிர் படையுடன்
உரசிடுவார் ஓரிரு நொடிகளில்

அநிகம்*** இரண்டும் மோதும் ஒலி கேட்டு
முகிலும் செவிகளை மூடிக்கொண்டது
தனது இடியின் ஒலிக்கு மிகையில்லை என்ற‌
அகந்தை அப்போது முறிந்து போனது,

ஈட்டியை மாரில் ஏற்றியதும் உருவியதும்
இமைக்கும் பொழுதினும் சற்று குறைந்தே இருந்தது
அவன் இடது கை கேடையம் வாள் வீச்சைத் தடுதிட
எதிர் வீரனின் தொண்டையில் ஈட்டி குடியேரியிருந்தது

மன்னன் மடிந்தால் முடிந்திடும் போரென
முதுகில் தாக்கவே ஓடினான் ஒருவன்,
எரிந்தான் ஈட்டியை கயவன் மார் பிள‌ந்திட
முடியரசன் உயிர் காத்தான் நாட்டை காத்திட

நொடியில் உருவினான் உரைவாளை உடனே
சீறிய காளை அவன் மீது பாய்வது கண்டு
உருண்டது தலையென்று நினைதான் ஆனால்
தடுத்திருந்தான் அக்காளை தன் வாள் கொண்டு

பகைவன் வீசிய மறுவீச்சை தடுத்திட,
தவிறினால் பிளந்திருக்கும் தன் தலையென உணர்ந்தான்,
இப்படி ஒரு வீரனை இதுவரை கண்டதில்லை
வெல்வது அவனை அவ்வள‌வு எளிதில்லை

குதிரைகள் இடித்துக்கொள்ள நிலையிழந்தான் அவன்
கைகள் விடுபட‌ இடரி விழுந்தான்
இவன் நொடியில் அவனுயிர் குடித்திருப்பான்
ஆனால் வீரத்தை மதித்திடவே முடிவெடுத்தான்

தானும் குதித்தான் விரைந்து தரையிலே
அவன் அதற்குள் எழுந்திருந்தான் சின‌த்திலே
அவன் தாக்கினான் முழு வலுவோடு
அதை தடுப்பதே இவனுக்கு பெரும்பாடு

இவனுக்கு மூன்று அவனுக்கு இரண்டென வெட்டுக்கள்
அகமெங்கும் வழிந்திடும் குருதியின் சொட்டுக்கள்
சாரலோடு தென்றலும் சேர்ந்து வீச‌
அதை உணராத நிலையில் இருவிள‌ம் மொட்டுக்கள்

ஞாயிறு பயண‌த்தின் பாதியை அடைந்திட‌
முகில்கள் அதைச்சற்று மறைத்தே நின்றிட‌
வெட்டுண்ட மகாரின் வேதணைக் குரல்கேட்டு
இயற்ககையின் அழுகை சாரலென விழுந்தது

வெட்டுக்களின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டிருக்க‌
குருதியின் இழப்பில் உடல் சோர்ந்து கொண்டிருக்க‌
வாகையெனும் கவர்ச்சி மங்கை
ஒருவனுக்கும் மாலையிடுவதாய்த் தெரியவில்லை

அவன் வாளோங்கி வரும் நிலைகண்டு
தன் தலைக்கே என்றிவன் வாளுயர்த்த‌
அவன் மின்னலின் வேகத்தில் முன் குனிந்து
இவன் வைற்றை எப்போதோ கிழித்திருந்தான்

உயர்த்திய வாளை தரையில் ஊன்றி
மண்டியிட்டு நிலத்தில் சரிந்த பிள்ளை
அந்த சில நொடியின் வேதணையை இவன்
தனது இருபது பிராயதில் கண்டதில்லை

பெற்றவள் முகத்தை இனி பார்பதியலாது
தகப்பனின் அறிவுரை இனி உதவாது
இந்தச் சிந்தனையின் வலி அவன் மனத்திலேற‌
அகத்தின் வலி அவனை விட்டு ஓட‌

குருதி முடிவின் விளிம்பை அடைந்தது
சட்டென அவனது முகம் மலர்ந்தது
பாசறைக்குத் தான் கிள‌ம்பிய போதும்
நல்லவேலை தான் உரைக்கவில்லை

தெரிந்திருந்தால் தவித்திருப்பாள் என் பூங்கொடி
மூச்சுடன் பிரிந்தது உயிரும் அந்நொடி
அந்தோ அவனுக்கு தெரியாமல் போனது
அவள் என்றோ தெரிந்துகொண்டாள் தலைவன் விழியால் சொன்னது

*ததகம் > காற்று
**காரா > கார் + ஆ > கருமை + மாடு > எருமை
***அநிகம் > படை

எழுதியவர் : சேகர் (5-Aug-12, 10:47 pm)
சேர்த்தது : இராஜசேகர்
பார்வை : 282

மேலே