எப்படியும் ஒரு நாள்
எப்படியும் ஒரு நாள்
நம் கண் பார்வையற்று போகப்போகிறது
நம் காது செவிடாகப்போகிறது
நம் அங்கங்கள் செயலியக்கப்போகிறது
நம் சுவாசம் நின்றுவிடப்போகிறது
சர்வ நாடியும் அடங்கிவிடப்போகிறது
நம் ஊன் கழுகுக்கு உணவாகப்போகிறது
என்றோ, எப்பொழுதோ
நாம் சாவது
அஞ்ஞானம்
இன்றே, இப்பொழுதே
"நான்" சாவது
மெய்ஞானம்