பாரதி பிடிக்கும்
எனக்கு பாரதியை
பிடிக்கும் - அவன்
பாடலை பிடிக்கும் - நேர்
கொண்ட அவன்
பார்வையினை பிடிக்கும்
பார்பிணியத்தில் பிறந்து
பெண்ணடிமை எதிர்த்து
பாடல் வடித்தான் பாரதி
ஆத்திகம் கற்றான்
நாத்திகம் பேசினான் - அதனால்
எனக்கு பாரதி பிடிக்கும் - அவன்
பைந்தமிழ் பிடிக்கும்
வெள்ளையனை கொள்ளையன்
என்றான்
வேங்கையாக சீறு என்றான் - அதனால்
எனக்கு பாரதியை பிடிக்கும்
புதுக்கவிதைக்கு வித்திட்டவன்- தமிழ்
புலமையில் பெயர் பெற்றவன்
எனக்கு பாரதியை பிடிக்கும்
அவன் சாரதியாய் வாழ பிடிக்கும்