thavamaai thavamirunthu

சித்தம் உருகுதடி
சித்திரமே உனக்காக.........
நித்திரை இலக்குதடி-இமைகள்
நித்தம் உன் வரவுக்குத்
தவம் கிடக்குதடி......

ஆயிரம் கண்கள்
என்னைக் கடக்குதடி....
ஆயினும்
அன்பே,உன்னைக் காணத்தான்
இந்தப் பாவி மனம் தவிக்குதடி...


கற்பனைக் கொட்டி குவியுதடி...
உன் நினைப்பே,
என் கவிதைக்கு உயிர் நாடி...

அற்புதமாய் நீ இருக்க
அதிசயங்கள் எதற்கு.....
ஆகாயம் கூட ஈடாகாது
உன்மீது
நான் கொண்ட காதலுக்கு......
-santhmetha

எழுதியவர் : santhmetha (7-Aug-12, 8:58 am)
பார்வை : 186

மேலே