என் அழகில்லாத அழகிகள்

அவள் பார்ப்பதற்கு
அழகில்லை
என்று தெரிந்தே
காதலித்த எனக்கு
இன்று உலகில் அவளுடன் சேர்த்து
யாரையும் உருவத்தில்
அழகை
பார்க்க தேவையில்லை என்று
அழகான அன்பினால்
எனக்கு மீண்டும்
உணர்த்திவிட்டாள்
என் காதலியும்
என் அன்னையைப்போல......

எழுதியவர் : @@@ ம.அன்பழகன் @@@ (9-Aug-12, 4:33 pm)
பார்வை : 204

மேலே