திரவம்தான்
உன்னை நான்
முதன் முதலாக பார்த்த பொழுது
பொழிந்த மழையும்
திரவம்தான்....
உன்னை பார்க்க
உன் இல்லத்தருகில்
தினந்தோறும்
அருந்திய தேநீரும்
திரவம்தான்....
உன்னை காதலிக்கிறேன்
என்று உனது தோழியிடம் கூறிய பொழுது
அவளுக்கு வாங்கிகொடுத்த
குளிர்பானமும்
திரவம்தான்....
நீ என்னை விரும்பவில்லை
என்று நான்
அறிந்ததும் அருந்திய மதுவும்
திரவம்தான்....
நான் விவரமறிந்த பிறகு
முதன் முதலாக
என்னை என் உறவினர்
குளிர்ப்பாட்டிய இறுதி நீரும்
திரவம்தான்....