நினைவுக்கும் வலிக்குதடி..
என்
மனதில்
இருக்கும்
நினைவுகள்
என்று பார்த்தல்
அதில் அதிகம்
நீ தான் இருக்கிறாய்...!
என்னாலோ, என்னோடோ,
நீ சிரித்த நிமிடங்கள்
நிலைத்திருந்தலும்
அதில் சில
சிதைந்திருந்தாலும்...
முதல் முதலாய்
என் முன்
நீ அழுத அந்த நொடி...
இப்போது நினைத்தாலும்
வலிக்குதடி..
உள்ளத்தில்
உன்னால் இனிக்கும் நினைவுக்கும்...!