நன்றி-யாருக்கு???

அவிழ்வன பல..
அவிழ்ந்து மொழிவன சில..
மொழிந்து புணர்வன சில..
புணர்ந்து பிரிவன பல..!!!

பிரிந்து வீழ்வன சில..
பிரிந்து வாழ்வன சில..
வாழ்ந்து வீணாவது பல..!!!

புணர்தலும் பிரிதலும் மட்டுமே,
காதலின் இலக்கணமோ..??!!!

இணைந்த இதழ்களிலும்
இணைந்த இமைகளிலும் மட்டுமே,
மெய்யற்ற காதல் வாழ்ந்திடுமோ..??!!!

இங்கும்
அவிழ்ந்தது..
மொழிந்திருந்தால்,
ஒழிந்திருப்பேன் நிச்சயம்...!!!!!!!!!

எழுதியவர் : (10-Aug-12, 10:10 pm)
பார்வை : 146

மேலே