சுதந்திரம் வேண்டும் சுதந்திர நாடே
தெற்கே ஓர் அன்னையிடம்
வடக்கே பூகம்பம் வந்தது
1000 பேர் பலி என்று சொல்
அய்யோ பாவம் என்று வருந்துவாள்
மொழியால் , இனத்தால் ,எல்லைகளால்
பிரிந்து கிடந்தாலும்
மனித இழப்பை குடிமக்கள்
யாரும் விரும்புவதில்லை
சிலரது சுயனலத்தாலையே
பிரிந்து கிடக்கிறோம்
பிரிக்க படுகிறோம்
போர்களை அறிவிப்பது
நாடல்ல நாட்டுமக்களும் அல்ல
நாட்டு தலைவர்கள்
சுதந்திரம்
ஒவ்வொரு மனிதனுக்கும்
தேவை பறவை போல
ஆயிரம் வசதிகளுடன்
எல்லை என்னும் கூட்டில் அடைத்தால்
அது சுதந்திரம் ஆகாது
ஓரறிவு பறவை
ஆறறிவு மனிதன்
நினைவில் இருக்கட்டும்
சுதந்திர நாடு என்று
மார்த்தட்டிகொள்ளும் மடையர்களுக்கு
வடக்கே ஓர் அன்னையிடம்
தெற்கே சுனாமி வந்தது
5000 பேர் பலி என்று சொல்
அய்யோ பாவம் என்றுதான் வருந்துவாள்
அவளும்