மெழுகுவர்த்தி

நீ ஒளிர
நான் உருகுகிறேன்
நீ என்னில்
நடனம் ஆடுகிறாய்
நான் உன்னை
நழுவாது தாங்குகிறேன்
நீ அழகாய் ஒலிர்வதட்காய்
நான் உருவை ஒதுக்குகிறேன்
நாழிகைக்கு நாளிகை
நான் உனக்கிரை
மாளிகை போல் இருந்த நான்
மாய்ந்து விடுகிறேன்
தாய் அல்ல
நான் மெழுகுவர்த்தி

எழுதியவர் : sailaja (14-Aug-12, 8:02 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 266

மேலே