உதிரவா...?

கடலை
கதிரவன்
முத்தமிட்டு
மேல் எழ..
அதன் கதிர்
பட்டு
நீ விழித்தெழ..!
உறங்காமல்
உன்னையே
பார்த்துகொண்டிருப்பதை
நினைத்து
வியந்தாய்..?
செல்லமாய் கண்ணடித்தேன்...!
சிணுங்கிகொண்டே
கட்டியனைத்தாய்...!
வாழ்கையில் நகரவே கூடாத
நிமிடம் அது...!
கதிரவா...
இந்த நிமிடமே
வேண்டுமானாலும்
இந்த உடலை விட்டு
உதிரவா...?