அழகின் நிறைவு.

அகத்தின் நிறைவே அழகு.
யுகத்தின் பொலிவும் அழகு.
முகத்தில் புன்னகை அழகு.
இகத்தில் இனிமையே அழகு.

அஞ்சா நெஞ்சம் அழகு.
ஆண்மை மிளிர்த்தல் அழகு.
பெண்மையில் புனிதம் அழகு.
மென்மையாய் உரைத்தல் அழகு.

இயற்கைமுழுதும் அழகு.
செயற்கை அற்றது அழகு.
இயல்பாய் இருப்பது அழகு.
இனிய சுபாவம் அழகு.

உள்ளத் தூய்மை அழகு.
உயர்ந்த நோக்கு அழகு.
உரியன செய்தல் அழகு.
புரிவன தெளிதல் அழகு.

கருணை காட்டல் அழகு.
கடமையில் திறமை அழகு.
மடமை தவிர்த்தல் அழகு.
மட்டிலா வாய்மை அழகு.

ஒழுக்கம் ஒப்பற்ற அழகு.
ஒற்றுமை உலகிற்கு அழகு.
வேற்றுமை அற்றது அழகு.
ஆற்றலில் அறிவே அழகு.

அன்பான நினைவும் அழகு.
பண்பான செயலெலாம் அழகு.
உண்மையாய் வாழ்தல் அழகு.
உண்மையில் நிறைதல் அழகு.

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (17-Aug-12, 7:48 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 156

மேலே