பைத்தியக்காரன்...
பல் படராத பச்சிளம் குழந்தையும் அல்ல,
கடுந்தவம் புரிந்த துறவியும் அல்ல...
ஆனாலும்
என்னுள் கடந்தகாலம் ஏதும்
கடுகளவும் இல்லை,
எதிர்காலம் எதையும்
எதிர்பாதும் இல்லை...
நொடியில் நடக்கும் நிகழ்வுகளை தவிர
நினைவுகள் என்று ஏதுமில்லை...
பற்றுகள் அற்ற பரதேசி ஆனேன்
பாவி நானோ
பாவை உன்னால்...
இத்தனை பண்புடன்
நான்
பாதையில் போக
பார்ப்பவர் அழைக்கிறார்
என்னை
"பைத்தியக்காரன்" என்று...