அறம் பாடும் நீ சிரம் தாழ்த்தி செல்.

இறைவன் படைப்பில்
எல்லோரும் சமமென்றால்,
பிறப்பாலே உயர்வு தாழ்வு,
பிரித்துப் பார்ப்பது ஏன்?

வேதங்கள் படித்தாலும்,
வேள்விபல செய்தாலும்,
கோவில் குளம் சென்று,
கும்பிட்டு நின்றாலும்,
மறுவேளை உணவுக்கு,
மன்றாடும் மக்களிங்கு,
தினந்தோறும் பார்க்கின்றேன்,

அவர் செய்த பாவம் என்பாய்,
முற்பிறவி வினைகள் என்பாய்,
நிறத்தாலும் பிறப்பாலும் நீ பிரித்து,
அவர் பங்கு பறித்தாயோ?
படைத்தவனே பார்த்திருந்தான்,
உன் பழி சுமந்து நின்றான்,
எதற்காக இந்த இருமுகமோ?
அறம் பாடும் நீ சிரம் தாழ்த்தி செல்.

எழுதியவர் : S.ராஜேந்திரன் (17-Aug-12, 6:27 pm)
பார்வை : 297

மேலே