என்னவளே ..
உனது
உடன்பிறந்தவள்போல்தான் நீயும் என்பது
உனது தாயின் யூகம்..
ஓடிபோய் எனது கரம்
பிடித்து விடுவாயோ என்பது
உனது தந்தையின் யூகம்..
ஏமாத்திவிடுவான் இந்தியன்
என்பது
உனது உடன்பிறந்தவளின் யூகம்..
இங்கு யூகத்துக்கு
பதில் கிடையாது ..
காலம் என் காதலை சொல்லும்..
காதல் யூகத்தை வெல்லும்..
கரையாத கல்லும்
மாறாத சொல்லும்
என் காதல் ஒருநாள்
புறம் தள்ளும் ..
விட்டு விடுவான் என்னை
விட்டு கொடுப்பான் காதலை
என்றெண்ணி
விட்டு விடாதே ..
உன்
உறவுக்காக
உறவுகளையும் விடுவேன்
உயிரயும் விடுவேன்
காத்திருக்கிறேன்..
காலம் கரைந்தால்
காதல் குறையும்..
பேசாதிருந்தால்
காதல் குறையும்..
பாராமல் இருந்தால்
காதல் குறையும்..
என்றெண்ணி நீ
நினைத்தால்
ஏமாறி போவாய் ..
தடம் மாறி போவேன்
இடம் மறந்து போவேன்
ஒருநாள் எனை தேடும் போது
தடுமாறி போவாய் ..
கண் கலங்கி
சொல் வறண்டு
நீ நிப்பாய் என்னவளே ..

