பாண்டவர் பாசம்

அதுவொரு கனாக்காலம்
வீட்டில் இருந்ததோ
இரண்டு குளியலறைகள்
கையில் இருந்ததோ
ஒரே சவர்க்காரம்
வெட்டினோம் இரண்டாய்
பாசத்தால் அல்ல
பணப் பற்றாகுறையால்
பணம்தான் போதவில்லை
பாசத்திலோ பாண்டவர்கள்

உன்னம்மையும் என்னம்மையும்
வேறு வேறாயினும்
உந்தையும் எந்தையும்
வேறு வேறாயினும்
நீயும் நானும்
அண்ணன் தம்பி
பாசம் மிகுந்த
அக்கா தம்பி
பகிர்ந்து கொண்டோம்
இன்பத்தையும் துன்பத்தையும்
பாவித்து கொண்டோம்
உன்னாடையை நானும்
என்னாடையை நீயும்

காலம் கனிந்தது
நிலைமை மாறியது
இன்றும் வீட்டில்
இரண்டு குளியலறைகள்
ஆனால் குளியலறையில்
பல சவற்காரங்கள்
கைகழுவ ஒன்று
முகம்கழுவ மற்றொன்று
மேல்கழுவ இன்னுமொன்று
சொல்லபோனால் வீட்டுவாசலில்
இரண்டு வாகனங்கள்
இருசக்கரத்தில் ஒன்று
நாற்சக்கரத்தில் மற்றொன்று
காய்கறி வாங்க
ஒரு வண்டி
பந்தாவாக செல்ல
இன்னொரு வண்டி

பொருளாதாராத்தில் வென்றுவிட்டோம்
ஒருதலை பட்சமாக
ஆனால் பாசத்தில் ???
அண்ணன் தம்பியாக
அக்கா தம்பியாக
இருந்த நாம்
சித்தப்பன் பெரியப்பன்
பிள்ளைகளாக மாறிவிட்டோம்
பாண்டவர்களாக இருந்தநாம்
பங்காளிகளாக மாறிவிட்டோம்
உரிமையோடும் உணர்வோடும்
பழகிய காலம்மாறி
கடமைக்காகவும் தேவைக்காகவும்
தேடபட்டவர்கள் ஆனோம்

பண வேறுபாட்டால்
பாசம் வேறுபட்டது
உள்ளம் வேறுபட்டது
உணர்வு வேறுபட்டது
உரிமைகூட வேறுபட்டுவிட்டது
என்பிரச்சினை என்னோடு
உன்பிரச்சினை உன்னோடு
என்சந்தோஷம் என்னோடு
உன்சந்தோஷம் உன்னோடு
மீண்டும் வருமா
உள்ளம் ஒன்றான
அந்த வசந்தகாலம்
இல்லை இறுதிவரை
இதுதான் நிரந்தரமா ???
காத்திருக்கின்றோம்!!!

எழுதியவர் : Naththi (21-Aug-12, 3:48 pm)
பார்வை : 332

மேலே