நட்புச் சோறு

அளவு தெரியாமலும் அளவு இல்லாமலும் அளக்கப்பட்ட அன்புக் கலந்த சாப்பாடு அரை வைற்றுக்கு என.,

டேய் என்னடா மாப்பள சாப்பாடு கம்மிய இருக்கு எனக்கே பத்தாது போல , இல்ல மாப்பள எப்பவும் போலத்தான் வைச்சேன்? ஆனா கொஞ்சம் கம்மிய போயுருச்சு போல மாப்பள ... சரி விடு அரிசி வாங்கிடலாம் .

(சிறிது நேரத்திற்கு பிறகு )

டேய் ஏன்டா போதுமா? இல்ல மாப்பள அது கொஞ்சம் வயறு சரில்ல போல சரி விடு நீங்க நல்லா சாப்படுங்கட . ..

(சிறிது நேரத்திற்கு பிறகு )

டேய் ஏன்டா உனக்கும் போதுமா ? இல்ல மாப்பள
அது அன் டைம் ஆச்சுடா அதான் பசி இல்ல மாப்பள.. சரி நீ நல்லா சாப்புடுட ...

(சிறிது நேரத்திற்கு பிறகு )

டேய்.. டேய் ஏன்டா நீயும் எந்திருச்சுட்ட? இல்ல மாப்பள நல்ல சாப்பாடுட வயறு நிரம்பிருச்சுடா..
அதான் நீங்க ரெண்டு பேரும் நல்லாவே சாப்புடல..
அதான் நான் ஒரு கை பார்த்துட்டேன்.

அடுத்த நாள் காலை அதே மீந்த சாதம் மீண்டும் ஒரு அன்பின் வலிமை....

இது எங்களின் குடும்பம், இது எங்களின் விடா முயற்சி , இது எங்களின் தெளிவு, இது எங்களின் பிணக்கம்,.....

இது எங்களின் நட்புச் சோறு.

நாங்கள் ஓய்வதில்லை ...

எழுதியவர் : கார்த்தி பெரியசாமி (23-Aug-12, 12:34 am)
சேர்த்தது : Karthy.P
பார்வை : 168

மேலே