பெண் மனம் பேதலித்தால், பேரிழப்பு ஆண்களுக்கே!

பெண் மனம் பேதலிக்கும்,
என்பார்கள் உண்மைதானோ!
கண்ணிமைக்கும் நேரத்தில்,
காதல் மாறும் காலம் இது,
நேற்றுவரை இருந்த நட்பு,
காற்றினிலே பறந்து போகும்.

ஏதேதோ கனவுகளை,
ஏன்தானோ வளர்த்தாள் ,இன்று,
எங்கேயோ பார்த்ததுபோல்,
சென்று விட்டாள் ஏனோ?
பெண் மனம் பேதலிக்கும்,
என்பார்கள் உண்மைதானோ!

சொன்ன இன்ப வார்த்தைகள்,
நாம் கூடி வாழ்ந்த நேரங்கள்,
கண்ட பல காட்சிகள்,
அந்தக் கனாக் கால அன்புதான்,
என்மனதை வாட்டுதே,
பெண் மனம் பேதலித்தால்,
பேரிழப்பு ஆண்களுக்கே!

எழுதியவர் : S.ராஜேந்திரன் (29-Aug-12, 11:25 am)
பார்வை : 318

மேலே