வேண்டும் இன்னொரு விடுதலை

எங்கும் உயிருள்ள பிணங்கள்..!!,

சவப்பெட்டியிலே அரசாங்க நாற்காலிகள்..!!,

அதிலே
வெள்ளைவேட்டி அகிம்சை முதலைகள்...!!,

அவர்கள் ,
ஆட்டும் படி ஆடும்
காக்கி நிற கழுகுகள்!!,

அம்மணமாய் திறியும் சட்ட ஒழுங்குகள்..,

கொள்ளையடிப்பவனுக்கு கலைமாமணி பட்டங்கள் ..,

கற்ப்பிழந்தவளே இங்கு கற்ப்புக்கரசிகள்...!!,

என,
ஜனநாயக ஆட்சி செய்யும்
இந்திய நாடு இது..,

இருளில் வாங்கிய சுதந்திரத்தால்
இன்று இருண்டு கிடக்குது...,

வெள்ளையன்,
யாருக்கு தந்தான்..!!?
எவனுக்கு தந்தான்...!!?
இந்த சுதந்திரத்தை..,

ஆம்
பணக்கார வர்க்கத்துக்கும்..,
கொள்கையோடு கொள்ளையடிப்பவனுக்கும்,

தந்தான்
இந்த சுதந்திரத்தை

மீண்டும்
இந்தியனிடமிருந்தே இந்தியர்களுக்கு
இன்னொரு விடுதலை வேண்டும்
ஆம்

ஆனால்

இம்முறை பகலிலே
எல்லோரின் கரங்களும்
உணரும் படி..,

அனைவருது கண்களுக்கும்
தெரியும் படி...,

கொடுத்திட வேண்டும்

கத்தியின்றி இரத்தம்சிந்தி வாங்கிய
சுதந்திரத்தை பாதுகாக்கக
தீ துப்பி ஏந்தி நிற்கும் நிலைமாற
வேண்டும் இன்னொரு விடுதலை....!!!!!!!!!!,

சாமி-யார் என்ற போர்வைக்குள்ளே
சாக்கடையாய் திறியும் ஆசாமிகளிடமிருந்து
வேண்டும் இன்னொரு விடுதலை ......!!!!!!,

தனி மனிதன் சுதந்திரத்தில் தலையிடும்
ஒவ்வொரு மனிதனிடம் இருந்தும்
வேண்டும் இன்னொரு விடுதலை .....!!!!!!!!!!!!!!!,

எழுதியவர் : வாளிதாசன் (31-Aug-12, 5:23 pm)
பார்வை : 229

மேலே