நீயும் என் தோழனே

அன்பும் அடக்கமும் அதிகமிருந்தால்
பணிவும் பண்பும் உனக்கிருந்தால்
சாதி மதம் தகர்தேரிந்தால்
வறுமையின் குரல் உனக்கும் கேட்டால்
உதவும் கரங்கள் நீ கொண்டிருந்தால்
ஏழைக்கு உதவ மனமிருந்தால்
நீதிக்கு நீ குரல் குடுத்தால்
அநீதிக்கு கதவடைதல்
நல்ல ரசனை உன்னிடம் இருந்தால்
பிற உயிர்கள் மீதும் இறக்கம் உனக்கிருந்தால்
தமிழின் சுவை நீ அறிந்திருந்தால்
தமிழ் பற்று உனக்கிருந்தால்,
தன் மானம் உனக்கிருந்தால்
வீரமும் விவேகமும் சேர்ந்திருந்தால்
நட்புக்காக உயிர் விடவும் துணிவிருந்தால்
காதலித்து கவிதை எழுதி இருந்தால்
நிச்சயம் நீயும் என் தோழனே.

எழுதியவர் : இளம் கவி அரிமா (1-Sep-12, 7:24 pm)
சேர்த்தது : ilamkaviarima
பார்வை : 640

மேலே