எழுத்து - அற்புத வலை தளம்

கட்டு கட்டாக
கவிதைகளையும்
கட்டுரைகளையும்
மன வேதனைகளையும்
வார மற்றும் மாத
பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு
பத்திரிகையில் வெளியாகாதா
என்ற ஏக்கத்தில் கண்கள் பூத்து
எழுத்திற்கு நான் தகுதி இல்லையோ
என்று வேதனை பட்ட நாட்கள்தான்
எத்தனை எத்தனை
வெளியாகும் சில படைப்புகள்
கண்டு பூரித்த நாட்கள்தான்
எத்தனை எத்தனை?

எழுத்து என்ற ஓர் அற்புத
வலைத்தளம் என்னை போல்
எங்கும் உள்ளங்களுக்கு
ஓர் சிறந்த வரப்பிரசாதமே...

எழுதியவர் : சாந்தி (2-Sep-12, 10:47 pm)
பார்வை : 193

மேலே