விண்மீன்கள் கூட்டத்திலே

விண்மீன்கள் கூட்டத்திலே
தன் நிகரற்று வெண்ணிலவு ஒளிரும்
கலைந்தோடி மறைக்கும் மேகக் கூட்டத்தினை
விலக்கி வந்து முகிழ்த்து நிற்கும்
உண்மை உள்ளமும் கொண்டு எழுதிடு கவிதை
உயரிய சிந்தனை கொண்டு தீட்டிடு கவிதை
பாவனை செய்யும் வேட மனிதர்களின்
வேதனைக் கூட்டம் ஆயிரம் போகும் ஊர்வலம்
சாதனை நெடுஞ் சாலையில் நடத்திடு நின்கவிதை
வேதனைகள் வெட்கித் தலை குனியும்
உன்கவிதை வானத்தின் நீலத்தை தொடும்--அது
உனை மானப் பெரிய கவிக் கூட்டத்தில் சேர்க்கும்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-12, 10:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 176

மேலே