ஆசை...ஆசைதான்..!

ஆசை...ஆசைதான்..!
ஒல்லி பையனுக்கு
குண்டு ஆகிட ஆசை!
குண்டு பையனுக்கு
ஒல்லி ஆகிட ஆசை!

சீண்டும் உறவுகளை
சிரிக்க வைத்திட ஆசை!

கோடு தாண்டவும் ஆசை!
குமரி பொண்ணுக்கு
மீசை வைக்கவும் ஆசை!
வயசு கடக்கும் போது,
வாலிபம் நிலைக்க வேண்டுமென்ற ஆசை!

கனிந்த பருவம் கண்ட போதும் ,
கட்ட எறும்பு கடிக்க வேண்டுமென்ற ஆசை!
குனித்து நிமிரும் அழகில் ,
கொத்தும் கிளியாய் மாற ஆசை!

கடந்து போகும் நினைவில்
கடவுள் பக்கமிருக்க ஆசை!
கவிழ்ந்து கிடக்கும் போது,
காலன் வந்து அழைக்க ஆசை!
காலன் வந்து நிற்கும் போது,
காத்திருக்க சொல்ல ஆசை!

மனிதம் பூக்கும் மனதை
மறக்கச் செய்யும் ஆசை!
ஆசை.. ஆசைதான்!
அனைத்து மனதிலும் ஆசைதான்!

ஆசை இங்கே
அச்சாணி!
அதிலே சுழல்கிறோம்
பூச்சூடி!

எழுதியவர் : ந.ஜெயபாலன்.திருநெல்வேலி ந (3-Sep-12, 10:32 am)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 146

மேலே