காவல்காரன்
குழந்தையின் கையிலிருந்த கனியை
தட்டிப் பறித்தது குரங்கு
குழந்தை அழுது நின்றது
நழுவி விழுந்த கனியை
கொத்திச் சென்றது காக்கை
காக்கையிடமிருந்து விழுந்த கனியை
கவ்விச் சென்றது பூனை
பூனையை துரத்தி பிடித்தது நாய்
கனியைப் பறித்து குழந்தையிடம் தந்தது
குழந்தை சிரித்தது வாலாட்டி நின்றது நாய்
----கவின் சாரலன்

