என் சுவடுகள்

காலக்கரையில்
கால் நனைத்தபடி நீளநடக்கிறேன்
அலைத்தொடும் அருகலில்
என் சுவடுகள் இருக்கின்றன கவிதைகளாக
நாளாந்தமான புதுவிதிகளின் பிறப்பில்
என் சுவடுகளில் சில நிலைத்தும்
சில அழிந்தும் காண
எஞ்சியவற்றில் வாழ்ந்திருப்பேன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (4-Sep-12, 12:09 pm)
பார்வை : 279

மேலே