அம்மாவின் தவிப்பு
இந்த இரண்டு வருடத்தில்
நான் அவனை பிரிந்ததே இல்லை .
இந்த இரண்டு நாளில்
அவன் பிரிவை நன்கு உணர்கிறேன் .
எங்கு சென்றாலும் அவன் என்னை
பின் தொடர்கிறான் .
கண்களில் கண்ணீரோடு பிரிந்து வந்தேன்,
ஆனால் நீயோ விளையாடி கொண்டிருந்தாய்..
நடப்பது அறியாமல்,
அறியும் வயதும் இல்லை உனக்கு..!
உன் நிழலோடு பேசி நினைவோடு உறவாடி
உன்னை நேரில் காணும் நாளை
எண்ணிக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறாள்
இந்த தாய்!!