சிறகு தந்த சிட்டு..............

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சின்னச் சின்னக் குருவிகள்...
செல்லமாய் விளையாடும் பறவைகள்...

கீச்...கீச்...ஒலி எழுப்பி...

வண்ண வண்ண சிறகுகளால்...
வட்டமிட்டு பறக்கின்றதே என்று...
ரசித்துக் கொடிருந்தேன்....

என்னருகில் வந்த சிட்டு...

என்ன நண்பா....
கவலையில் கண்கள் சோர்ந்துவிட்டது....

என்னை நண்பனாக ஏற்றுக்கொள்..

எழுந்து வா வானில்
பறக்கலாம் என்றது...

சிறகுகள் இல்லையே என்றேன்...

சிரித்துக்கொண்டே தன்...
சிறகில் ஒன்றை
ஒடித்துக் கொடுத்தது...

நண்பா...........

உன் வெற்றிகள் எல்லாம்...
இந்த நீல வானில்
விண்மீன்கள் ஆகட்டும்...

நான் அதை எட்டிப்
பிடித்து மலர் மாலையாக
உனக்குத் தருகிறேன்....

என்று சொல்லி விண்ணில் பாய்ந்தது...

அந்த செல்லச் சிட்டு...

.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : சிறகு ரமேஷ்.... (4-Sep-12, 6:41 pm)
பார்வை : 301

மேலே