என் இதயம்

எனகொரு இதயம்
இருக்கிறது
அது உனக்குள் இருந்து
துடிக்கிறது

உயிர் வரை ஒன்று
இனிக்கிறது
அது உன்னை நினைக்கும்
போது தெரிகிறது

சின்ன சின்ன மயக்கங்கள்
சில நொடி வரும்போது
சிறகுகள் இல்லாமல்
மனம் பறக்கின்றது

சிக்கன சிரிப்பால
நினைவில் படர்ந்தாலே
சிறை ஏதும் இல்லாமல்
என்னை கைது செய்தாலே

உன் கன்னகுழி பார்த்ததும்
தடுக்கி விழுந்தேனே
என் நெஞ்சுகுழி உள்ளே
அவள் இருகின்றாள்

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (5-Sep-12, 5:13 pm)
Tanglish : en ithayam
பார்வை : 312

மேலே