உதட்டில் வியர்குமா?

நான் எழுதிய வயலோரக் காதல் பாட்டு எனும் கவிதையில் நண்பர்களுடன் பேசிய ஒரு கருத்து என் மனதுக்குள் ஒரு விடயத்தை தேட தூண்டியது...

"செவ்வரத்த பூவப் போல
செவந்திருந்த ஒதட்டு மேல
குட்டி குட்டி முத்து மாதி
வேர்வப் பூவு பூத்துருச்சி ! “

எனும் வரிகளில் உதட்டின் மேல் வியர்க்காது எனும் கருத்துப் பரிமாறல்கள் சற்று விவாத பாணியில் சென்றுக் கொண்டிருந்தது....நான் எழுதிய வரிகளில் உதட்டின் மேல் பாகத்தில் என்ற அர்த்தம் வைத்து தான் எழுதினேன்...ஆனால் வரிகளைப் பார்க்கும் போது ஒரு சிறிய இலக்கணப் பிழை இருப்பது புரிந்தது..ஆனாலும் அது சரியா பிழையா என்பது எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதனால் அதனைப் பற்றி கொஞ்சம் இணையத்தில் தேடித் பார்த்தேன். அதில் கிடைத்த ஒரு விஞ்ஞான தகவல் இங்கே பகிர்ந்துக் கொள்கின்றேன்...கவிதையில் சொல்லிய வரிகளுக்கு இந்த செய்தியும் பொருந்தாது ஆனால் இந்த தகவல் உங்களுக்குப் பயனளிக்கலாம்.

கீழே இருப்பது விஞ்ஞானத் தகவல் -
_______________________________________________

பொதுவாக ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் என்று கே‌ட்டா‌ல் அனைவரு‌ம் உதடு என்பா‌ர்க‌ள்.
ஆனா‌ல் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம் கே‌ட்டா‌ல், அதில் உண்மை‌யி‌ல்லை. உட‌லி‌ல் எங்கெ‌ல்லா‌ம் சரும‌ம் இரு‌க்‌கிறதோ அங்கெ‌ல்லா‌ம் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் இரு‌‌க்‌கி‌ன்றன என்று உறு‌தியாக‌க் கூறு‌கி‌ன்றன‌ர்.

‌விய‌ர்வை சுர‌ப்‌‌பிக‌ள் அதிக‌ம் உள்ள இட‌ங்க‌ளி‌ல் ‌விய‌ர்‌ப்பது தெரி‌கிறது. குறைவாக உள்ள இட‌ங்க‌ளி‌ல் தெ‌ரிவ‌தி‌ல்லை.

அதாவது உட‌லி‌ன் சில இட‌ங்க‌ளி‌ல் அதிககமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உள்வளன. உத‌ட்டி‌ல் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் ‌மிக ‌மிக‌க் குறைவு. அதனா‌ல்தா‌ன் உத‌ட்டி‌ல் ‌விய‌ர்‌ப்பது நம‌க்கு‌த் தெ‌ரிவ‌தி‌ல்லை.

அதிலு‌ம் ஒரு ‌சிலரு‌க்கு அதி‌கமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உள்ள‌ங்களை, பாத‌ங்க‌ளி‌ல் அமை‌ந்து‌ விடுவது‌ம் உண்டு. உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் என்று எது‌வு‌மி‌ல்லை. உத‌ட்டு மேலயு‌ம் வே‌ர்‌க்கு‌‌ம்.
(நன்றி – இணையம்)

எழுதியவர் : கே.எஸ்.கலை (7-Sep-12, 12:10 am)
பார்வை : 223

மேலே