பழகிப்போனது எனக்கு !

காலையில் எழுந்தவுடன்
" இருக்கிறான் " என்று நம்பி அவனை வேண்டுவதும் ,

எனக்காகவோ பிறருக்காகவோ
மேனியில் தண்ணீர் படும் முன் அவன் பெயரைச் சொல்வதும் ,

இன்றைக்கு எனக்கு பிடித்த சாப்பாடு
என எல்லா நாளுமே தட்டை பார்த்தவுடன்
அவனுக்கு நன்றி சொல்வதும் ,

கல்லூரிக்கு போகும் முன்
இன்னைக்கு ஒரு வகுப்பாவது நடைபெறாமல் இருக்காதா
என்ற நப்பாசையில் எல்லோரும் இணைந்து அவன் படத்தை பார்பதும்,

ஆசிரியர் உடம்புசரி இல்லாததால் வராவிடினும் பார்ட்டி வைத்து கொண்டாடும் முன் அவனுக்கு சிறு பங்கை ஒதுக்குவதும் ,

கல்லூரி முடிந்து திரும்பும்போது யாரையாவது பார்த்து விட்டு
என்னை திரும்பி பார்க்கவை என அவனை தொந்தரவு செய்வதும்,

திரும்பினால் அவனை மறப்பதும்
திரும்பாவிட்டால் அவனை பழிப்பதும் ,

எல்லாம் முடிந்தாலும்
மீண்டும் வருவேன் என அவனையே பயம் கட்டிவிட்டு
படுக்கச்செல்வதும் ,

என
"அவனைச்" சார்ந்தே வாழ்ந்து பழகிப்போனது எனக்கு !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (9-Sep-12, 11:54 am)
சேர்த்தது : விசா
பார்வை : 117

மேலே