கலவரக் கல்லூரிகள்
தேர்தல் என்றாலே
நாட்டிலும்
கல்லூரிக் கூட்டிலும்
கலவரம்தானோ?
புத்தியை தீட்ட
புறப்பட்டு போனவர்கள்
கத்தியை தீட்டி
காயம் படுகிறார்கள்
இனி வரும் தலைமுறை
இந்தியாவில்
இப்படித்தான் இருக்குமா?
இப்படித்தான் இருக்குமென்றால்
இனியொரு விதி செய்வோம்.
மக்கள் வரிப்பணத்தை
மண்ணுக்குள் புதைக்கும்
இப்படி பட்ட கல்லூரிகளே
இல்லாமல் செய்வோம்.
கலவரம் இவர்களுக்கு
கற்று தந்தது யார்?
அறிவுக்கூடத்துக்கும்
அதனுள் வசிக்கும்
அன்புப் பறவைகளுக்கும்
அரசியல் தீயை
ஊட்டிவிட்டவர் யார்?
அரசியல் வாதிகளா?
நாளொரு சண்டை
நாடாளுமன்றத்தில்தான்
நடக்கிறது என்றால்.....
நல்லொழுக்கம் பயிலும்
கல்லூரிகளிலும் கலவரம்
காணச் சகிக்கவில்லையே?
ஆட்சி செய்யும்
அரசியல் வாதிகளுக்கு
அயிந்து வருடங்கள்
ஆட்சியை காத்திடவும்
அள்ளிச் சுருட்டவும்
காலம் போதவில்லை.
சீரழியும் சமுதாயத்தை
சீர்படுத்தி
செம்மைபடுத்தி
நேர்வழிக்கு கொண்டு செல்ல
நேரம்தான் இருந்திடுமோ?