கலைந்து போன கல்யாணம்

ஊர் பார்த்து சேர்த்துவைத்த
கல்யாணம் அது,
ஓடோடிச் சென்று
மூலையில் ஒழிந்து போட்ட
முடிச்சில்லை இது.
சீர் வழங்கி சிறப்பாக
சேர்த்து வைத்த திருமணந்தான் அது
நேர்ந்ததென்ன?
நெடு நாட்கள் செல்லவில்லை
இடி வந்து வீழ்ந்தென்ன?
பெரியோரின் வாழ்த்தெல்லாம்
பொய்யுண்டு போனதென்ன?
பொட்டு வைத்த கணவனுந்தான்
எட்டு வைத்து ஒழிந்ததென்ன?
விடைபெற்று சென்றிட்ட - நீ
விடை தந்தாய்
ஏற்கனவே உனக்கிருந்த காதலியால்.....

எழுதியவர் : S.Raguvaran (12-Sep-12, 7:09 am)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 199

மேலே