இசை
எரிமலைக் கடலில்
முத்துக் குளிக்க குதித்தோம்!
எழிலுடல் அழிந்தாலும்,
என்புருகி வழிந்தாலும்,
எண்ணங்கள் சிதறோம்.
இசை தரையில் கவிபுட்களை நட்டோம்.
சக்கரவாகம் மழை அருந்தும் - எம்
கற்பனை தாகம் சமுத்திரம் அருந்தும்
தடை குதிரையின் தலை பிடரி - பிடித்து
எடை இல்லா காற்றாகி விரைந்தோம்
எதற்கும் வருந்தோம்.
முட்களாலே ஒரு ரோஜா செடி - க்லோனிங்கில் இதோ !!!!!!