தனிமை

உயருக்குள் உயராய்
உதிரத்தின் உறவாய்
ஒன்றாய் சேர்ந்து நாம் படித்தோம்
மலருக்குள் புயலாய்
மௌனத்தில் சிலையாய்
ஒன்றும் அறியாமல் இன்று பிரிகிறோம் .
நீ பிரிந்து சென்றாலும்
உன் நினைவு பிரிய மறுக்குமடா .............
கடிதம் எழுதிட காகிதம் கூட
கண்ணீர் வடிக்கின்றது ...........................
நீ கனவில் வருகயில்
இரவு முழுவதும் இதயம் சிரிக்கின்றது
நம் அன்பிற்கு கண்ணீர் சாட்சிய்டா
நம் பிரிவிற்கு கனவு தோழனடா...........
பள்ளி நாட்களை தனிமையில் நினைத்தால்
சிலிர்த்து நிற்கும் அங்கம்
உன்னை பிரிந்த நாட்கள்
என்னை கடக்கையில் தீயில் வேகும் நெஞ்சம்
இந்த கவிதையின் ஒவ்வொரு வரிகளும்
என் கண்ணீர் துளிகள் தானடா ..........................

எழுதியவர் : (15-Sep-12, 2:53 pm)
சேர்த்தது : Jenifa
Tanglish : thanimai
பார்வை : 126

மேலே