சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா
நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சக கூட்டமாடா-இதை
நாளும் வளரவிட்டால் நாடு கெட்டுப்போகுமடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா
மதவெறி கொண்டு அலையும் கூட்டமடா-இது
மனிதாபிமானத்தை தின்று பல்லைக்காட்டுதடா
கட்டுக் கதைகளை சொல்லி ஏமாற்றுதடா-இது
நாட்டு முன்னேற்றத்தை முடக்கிப் போடுதடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா
பொய் பித்தலாட்டம் பேசியே அலையுதடா-இந்த
வாய் சவுடாலுக்கு பேர் இங்கு அரசியலாமடா
நாளும் விலை ஏற்றி மகிழுதடா கேட்டால்-இங்கு
நாட்டு வருமானம் போதவில்லையென புளுகுதடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா
மின்சார அடுப்பில் தீயெரிய மாட்டேங்குதடா-அந்த
சமையல் கேஸை நினைத்து வயிறு எரியுதடா
வதந்தீ மட்டும் என்றும் பற்றி எரியுதடா-இந்த
கொடும்தீ பரப்பி அலையுது ஒரு கூட்டமடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு எரியுங்கடா
போராடி நாட்டை தந்ததொரு கூட்டமடா -அதை
வேரோடு அழிக்க வந்தது ஊழல் கூட்டமடா
சட்டமும் இங்கே பட்டமாய் பறக்குதடா –அது
சதிகாரர் கையில் போய் விளையாடுதடா
சுடுகாடு எங்கே இருக்கு சொல்லுங்கடா-இந்த
சோம்பேறிக் கூட்டத்தை கொண்டு புதையுங்கடா